Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 25 நவம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவருக்கும், கீர்த்திகா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகே உள்ள திருமண தகவல் மையத்தில் பணிபுரியும் கீர்த்திகாவை, அவரது தாயார் விஜயா பணிபுரியும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதையறிந்து அங்கு வந்த ஹரி பிரசாத், தான் கொண்டு வந்த அரிவாளால் கீர்த்திகாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகளைத் தாக்கியதைத் தடுக்க முயன்ற தாயார் விஜயாவுக்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்த ஹரி பிரசாத் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam