Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 25 நவம்பர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகர கூட்டுறவு வங்கி எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியின்படி இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, விவசாயக் கடன் தள்ளுபடியில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
குடும்பத்தில் எத்தனை விவசாயிகள் கடன் பெற்றிருந்தாலும், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கடந்த 30.04.2025-ம் தேதிக்கு முன்பாக நிலுவையில் உள்ள அனைத்து கூட்டுறவு பயிர்க்கடன்களையும் எவ்வித பாகுபாடும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கலவை கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வஜ்ரவேலு பிரபாகரன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, கூட்டுறவு பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு அளித்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கி அனைத்து தகுதியான விவசாயிகளுக்கும் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / LOGESHWARI V