கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சி – பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா குற்றச்சாட்டு!
கர்நாடக, 25 நவம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் கலபுரகியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் பாஜகவின் ''ஜனநாயகத்தைக் காப்போம்'' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயே
Karnataka bjp


கர்நாடக, 25 நவம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் கலபுரகியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் பாஜகவின் 'ஜனநாயகத்தைக் காப்போம்' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அந்த அராஜகத்தை வேரறுக்கும் நோக்கில் பாஜக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பெயரில் பேரணி நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கலபுரகியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் எங்களது மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்தப் பேரணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ராஜ்நாத் சிங் அவர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.மேலும், அமைச்சர் பிரியங்க் கார்கே பொறுப்பேற்ற பிறகு கலபுரகி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக விஜயேந்திரா குற்றம்சாட்டினார். குறிப்பாக, மாவட்டத்தில் அடிதடி, ரவுடித்தனம் மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரியங்க் கார்கே தனது துறைக்கான பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசுவதில்லை என்றும் விமர்சித்தார்.தொடர்ந்து ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

ஆனால், அவரது முயற்சிகள் வெற்றிபெறாது.நாட்டின் மக்கள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என பி.ஒய். விஜயேந்திரா தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V