அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் விடுப்பு அறிவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
தமிழ்நாடு, 26 நவம்பர் (ஹி.ச.) திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறப்பையொட்டி 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தந்தையர் விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பு தெ
வீரபாண்டி


தமிழ்நாடு, 26 நவம்பர் (ஹி.ச.)

திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறப்பையொட்டி 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தந்தையர் விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி,

குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவோ ஆண் அரசு ஊழியர்கள் இந்த விடுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பிரசவ காலத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவை வழங்குவதற்கும், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் தந்தையின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும் இந்த விடுப்பு உதவியாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் முறையிலும் பணியாற்றும் பெண்களுக்கு தற்போது ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி, அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒப்பந்தம், தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாட்கள் தந்தையர் விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இத்தகைய விடுப்பு சலுகைகள் அனைத்து வகை பணியாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P