நேபாள வெள்ளப் பேரிடர் -காணாமல் போன 213 இந்தியர்களின் பட்டியல் வெளியீடு
காத்மாண்டு, 26 நவம்பர் (ஹி.ச.) நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களையும் உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு தொடங்கி
Nepol


காத்மாண்டு, 26 நவம்பர் (ஹி.ச.)

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களையும் உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தின் வேகத்தில் ஆற்றின் கரையோரங்களில் இருந்த கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் பேரிடரில் சுமார் 1,453 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.

வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்பதற்கும், அவர்களின் நிலை குறித்து கண்டறிவதற்கும் நீண்ட நாட்களாகத் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், பலரது நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களை உயிரிழந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களின் பெயர்கள் நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர், விவரங்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் தெரிவிக்க விரும்பினால், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக eoikathmandufloodsupport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், +9779851316807 என்ற தொலைபேசி எண்ணையும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

குடும்பத்தினரிடமிருந்து பெறப்படும் ஆட்சேபனைகள் மற்றும் திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், நேபாள அரசு இறுதிப் பட்டியலைத் தயாரித்து, வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த இந்தியர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V