Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி, நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடுகின்றன.
இதில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்ய திட்டம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில்,
தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN