Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 நவம்பர் (ஹி.ச.)
பள்ளி மாணவ, மாணவிகளிடையே நேற்று பரிசு வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவதாகவும், எதிர்க்கட்சியினர் பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் ஊழல் செய்துள்ளார்கள் என்றும் ஒரு உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டைப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில்
அறிவார்ந்த சமுதாயம் உருவாக்க திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட நூலகங்களில் சில வஞ்சகர்கள் போலி பதிப்பகம் மூலம் தப்பான நூல்கள் அச்சிட்டு விநியோகம் செய்ததில் முறைகேடு செய்தவர்கள் யார்? என்பதை விசாரித்து அடையாளம் காணும் முன் திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்துவது அதுவும் மாணவ மாணவிகளிடம் கோயபெல்ஸ் போல் முழுவதும் பொய் பேச துணிந்துவிட்டீர்களே CM sir ?
ஏற்கனவே இது போன்ற மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பேசும் போது எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் மது, போதை பயன்படுத்துவது தவறில்லை என்ற பொருள் படும்படி பேசியதை நினைவுப்படுத்துவதோடு பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் CM sir ?
ஏதோ ஊழலை ஒழிக்கப் பிறந்தவர் போல் வந்திருக்கும் முதல்வரே, உங்கள் ஆட்சியில் பல ஊழல்கள் நடந்து கொண்டிருப்பதில் ஒன்றை நினைவுபடுத்துகிறேன் 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில், மாணவர் சைக்கிள் 1-க்கு ரூ.7,235 என்றும், மாணவி சைக்கிள் 1-க்கு ரூ.7,476 என்றும் விலை நிர்ணயம் செய்து, மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்ததில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பதை எதிர்கட்சியினர் சுட்டி காட்டிய பின்பு தான் ரூ.5,130 ரூ.5,260 என்ற விலையில் தற்போது கொள்முதல் செய்ததில் அரசு பணம் ரூ.115 கோடி உங்கள் ஊழல் ஆட்சியிலிருந்து காப்பாற்றப்பட்டதற்கு காரணம் எதிர்கட்சிகள் என்பதை மறந்து விடாதீர்கள் CM sir!
உங்கள் ஆட்சியின் அங்கமாக இருக்கின்ற அமைச்சர்கள், துணைசபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்கள், கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, லஞ்சம், ஊழலில் சிக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றி கொண்டிருக்கும் அரசின் முதல்வராக இருந்து கொண்டு லஞ்ச, ஊழலை ஒழிக்க வந்திருக்கிறேன் என்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இல்லையா CM sir ? என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN