நீர்வாழ் பறவைகள் உயிரிழப்பு காரணமாக கிண்டி சிறுவர் பூங்கா 3 நாட்களுக்கு மூடல்
சென்னை, 27 நவம்பர் (ஹி.ச) சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் சில பறவைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு ந
Guindy


சென்னை, 27 நவம்பர் (ஹி.ச)

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் சில பறவைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட உள்ளன.

பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட பறவைகள் அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பூங்காவில் உள்ள மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ