திருப்பரங்குன்றத்தில் இயல்பு நிலை திரும்பியதால் 5,000 போலீசார் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்
மதுரை, 27 நவம்பர் (ஹி.ச) திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிக்காக 15 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 5,000 போலீசார் நேற்று இரவு சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பினர். தற்போது மதுரை மாநகர காவல்துறை ம
Thiru


மதுரை, 27 நவம்பர் (ஹி.ச)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிக்காக 15 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 5,000 போலீசார் நேற்று இரவு சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பினர். தற்போது மதுரை மாநகர காவல்துறை மற்றும் பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கடந்த 23-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சென்னை, கோவை, திருச்சி, தர்மபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர்.

தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, நேற்று காலை 11 மணி முதல் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்ட போலீசார் சொந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது பழனி ஆண்டவர் கோவில் செல்லும் கோட்டை தெரு படிக்கட்டுப் பகுதி, காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்கா, மலைக்குப் பின்புறம் உள்ள படிக்கட்டுப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ