நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அறிவிப்பு மரபுகளை மீறுகிறது: டி.ராஜா குற்றச்சாட்டு
புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்புக்கும் கூட்டம் தொடங்குவதற்கும் இடையில் குறைந்தது 14 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்ட
Raja


புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.)

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்புக்கும் கூட்டம் தொடங்குவதற்கும் இடையில் குறைந்தது 14 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தொடரில் எந்தெந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன, என்னென்ன விவாதங்கள் நடைபெற உள்ளன என்பது குறித்த தெளிவான தகவல்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம் அல்லது நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால், இவை அனைத்தும் தற்போது ஊகங்களாகவே உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே எங்களது கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்றார்.

ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் தொகுதி மறுவரையறையையும் மத்திய அரசு ஏன் ஒன்றாக இணைக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படியானால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடமளிப்பது தொடர்பான திட்டத்தை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதால் அதன் அமலாக்கம் தாமதமாகுமா என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.ராஜா தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V