Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 27 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்ததுடன், தனது தரப்பு வாக்குமூலத்தையும் பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
முன்னதாக அருள் விக்னேஷ் இல்லத்திற்கு ஐஜி காமினி நேரில் சென்று ஆய்வு செய்தார்., பின்னர் மாவட்ட ஆட்சியரின் கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, இன்று மாலை அaayவரது வீட்டின் முன்பு தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தொண்டர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மொத்தம் ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V