Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 30ஆம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பூர், கடலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam