Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 28 நவம்பர் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறை (டீலிமிட்டேஷன்) மசோதாவுக்கு பி.ஆர்.எஸ். கட்சி ஆதரவு தெரிவித்ததன் பின்னணியில், பா.ஜ.க.வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக தெலுங்கானா அரசு கொறடா அத்தங்கி தயாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, தென்னிந்திய மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே வடஇந்திய மாநிலங்களை மட்டும் நம்பி அரசியல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
நாட்டை பிரிக்கும் அரசியலில் ஈடுபடும் பா.ஜ.க., தற்போது வடஇந்தியா, தென்னிந்தியா இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
ஆந்திராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி டீலிமிட்டேஷன் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்? தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தானா? மற்ற கட்சிகளுக்கு பொறுப்பு இல்லையா?
எதிர்கால அரசியல் ஆதாயங்களுக்காகவே பி.ஆர்.எஸ். கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசியல் செய்யும் அந்த கட்சி, இவ்வளவு முக்கியமான விவகாரத்தில் மவுனம் காப்பதற்காக விலைபோய்விட்டது.
தற்போது பி.ஆர்.எஸ். கட்சி அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA