திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் – 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
மதுரை, 28 நவம்பர் (ஹி.ச.) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை மாதத்
திருப்பரங்குன்றம்


மதுரை, 28 நவம்பர் (ஹி.ச.)

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் முருகன் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுவதற்கு முன்பாகவே 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொது தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட உள்ளதால் அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam