காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
வாரணாசி, 28 நவம்பர் (ஹி.ச.) இதையடுத்து, கோயிலில் பின்பற்றப்படும் மத மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி மாணவர்கள் அனைவரும் பாபா விஸ்வநாத்தின் கருவறைக்குச் சென்று வழிபாடு நடத்தினர். காசி விஸ்வநாதரை நேரில் தரிசித்த மகிழ்ச்சியில் பல மாணவர்கள் நெகிழ்ச்ச
Kasi tamil sangam


வாரணாசி, 28 நவம்பர் (ஹி.ச.)

இதையடுத்து, கோயிலில் பின்பற்றப்படும் மத மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி மாணவர்கள் அனைவரும் பாபா விஸ்வநாத்தின் கருவறைக்குச் சென்று வழிபாடு நடத்தினர். காசி விஸ்வநாதரை நேரில் தரிசித்த மகிழ்ச்சியில் பல மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலின் தலைமைச் செயல் அதிகாரி சத்யம் மிஸ்ராவும் பங்கேற்றார். தரிசனத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் அங்கவஸ்திரம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்களுக்கு ஸ்ரீ காசி விஸ்வநாத் தாமின் பிரமாண்டமான நடைபாதை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கோயிலின் தொன்மையான வரலாறு, கட்டிடக்கலைச் சிறப்புகள், ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் கோயில் கடந்து வந்த மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் காசி விஸ்வநாதர் தாம் மறுசீரமைக்கப்பட்ட விதம், விரிவுபடுத்தப்பட்ட வளாகத்தின் சிறப்புகள் மற்றும் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் அன்னக்ஷேத்திரத்தில் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய கே. வெங்கட ராமன் கனபதி, தென்னிந்தியாவிலிருந்து காசிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு இங்குள்ள கோயில்கள், நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மதப் பாரம்பரியங்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு காசி விஸ்வநாதர் கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்தச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் அடுத்ததாக ஹனுமான் காட் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும், அங்கு காசியின் பாரம்பரிய வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகச் சிறப்புகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். காசியின் தொன்மையான நாகரிகம் மற்றும் ஆன்மிக மரபுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் தமிழ்நாட்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவுக்கு இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, மொழி மற்றும் ஆன்மிகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இரு மாநிலங்களின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களைப் புரிந்துகொண்டு பரஸ்பர உறவை வளர்த்துக்கொள்ள இந்த நிகழ்ச்சி முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 மாணவர்களின் காசி பயணம், 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற தேசிய ஒருமைப்பாட்டு நோக்கத்தை முன்னெடுக்கும் முக்கியமான கலாச்சார முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V