Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 நவம்பர் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில்,
இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு, அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்வதற்காக சென்னை செல்கிறோம் என்றும் சகோதரர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எப்போதுமே ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ராகுல்காந்தியின் இந்தப் பதிவிற்கு திமுக ஐடி-விங் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக ஐடி-விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
அந்தச் சகோதரரைத்தான் நீங்கள் மிகுந்த வெட்கமின்றி முதுகில் குத்தினீர்கள் ராகுல் என்று தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P