திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை, 29 நவம்பர் (ஹி.ச.) தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் இன்று மாலை இந்தியா கூட்டணித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்
மு.க.ஸ்டாலின்


சென்னை, 29 நவம்பர் (ஹி.ச.)

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் இன்று மாலை இந்தியா கூட்டணித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து இன்று காலை டெல்லியில் மல்லிகார்ஜுன் கார்கே, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியை அழைத்துப் பேசினார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கும் கூட்டத்தில் கனிமொழியும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள எம்.பி. கனிமொழி, இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை சென்னை வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இக்கூட்டத்தில் கலாநிதி வீராசாமி, வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam