சண்டியர் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி வழங்கக்கூடாது - கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
மதுரை, 29 நவம்பர் (ஹி.ச.) மதுவுக்கும், போதைப் பழக்கத்திற்கும், திரை மாயைக்கும் இளைய சமுதாயம் ஆட்பட்டுவிடக் கூடாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கனவே சமூகத்தில் மிக மோச
K.Krishnasami


மதுரை, 29 நவம்பர் (ஹி.ச.)

மதுவுக்கும், போதைப் பழக்கத்திற்கும், திரை மாயைக்கும் இளைய சமுதாயம் ஆட்பட்டுவிடக் கூடாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

ஏற்கனவே சமூகத்தில் மிக மோசமான சூழல்கள் நிலவியதாகவும், அவற்றுக்கு எதிராகத் தாங்கள் போராடியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'சண்டியர்' என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் எடுக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

பழிக்குப் பழி என்ற ஆபத்தான போக்கில் இளைஞர்களை வழிநடத்தும் வகையில், கமல்ஹாசன் தனது படத்தின் தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர்,

தற்போதைய சமூகச் சூழலை கமல்ஹாசன் புரிந்துகொள்ளவில்லையா என்றும், தமிழ்நாடு எப்போதும் பதற்றமான சூழலில் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், வரும் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணசாமி, திரைப்படத் தணிக்கை வாரியத்தைச் சந்தித்து, 'சண்டியர்' திரைப்படத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam