4-வது டி20 கிரிக்கெட் போட்டி- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
சிட்னி, 29 நவம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த ந
A


சிட்னி, 29 நவம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று (நவம்பர் 29) சிட்னியில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு உள்ளது.

அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA