திமுகவுக்கு பெரும் சரிவுகாலம் தொடங்கிவிட்டது- மதுரையில் வைகோ அதிரடி விமர்சனம்
மதுரை, 29 நவம்பர் (ஹி.ச.) மதுரை திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில், மதிமுக மதுரை மாவட்டச் செயலாளர் முனியசாமியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்
Vaiko


மதுரை, 29 நவம்பர் (ஹி.ச.)

மதுரை திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில், மதிமுக மதுரை மாவட்டச் செயலாளர் முனியசாமியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

திருப்பரங்குன்றம் தீப விவகாரம், தொகுதி மறுவரையறை மற்றும் இந்தியா கூட்டணியின் அரசியல் நிலைப்பாடு குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த வைகோ, மரபுகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் கருத்துத் தெரிவித்தார்.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மதுரை மண்ணில், மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் சக்திகள் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்ட நிகழ்வு தனக்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்த அவர்,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குத் தோன்றிய கருத்துகளைத் தீர்ப்புகளாக வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த வைகோ, திமுக தானாகவே ஒரு பள்ளத்தைத் தோண்டி அதில் விழுந்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், திமுகவுக்குப் பெரும் சரிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணித் தலைவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, யார் யாரைச் சந்தித்தால் என்ன என்று பதிலளித்த வைகோ, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கும் என்றும், தேர்தலில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

தான் கூறிய கருத்துகளை முடிந்தால் பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / LOGESHWARI V