Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 03 நவம்பர் (ஹி.ச.)
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சபர்மதி சிறையில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மிரட்டலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறைகளின் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் படையினர் (BDDS), மோப்ப நாய்கள் உதவியுடன் சிறை வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். குறிப்பாக, சிறையின் முக்கியப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறைக்கு வரும் பார்வையாளர்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபரைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சலின் தொழில்நுட்ப விவரங்கள், சர்வர் பதிவுகள் மற்றும் ஐபி முகவரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P