ஆந்திரப் பிரதேசத்தில் முரசு புயல் - பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
ஆந்திர பிரதேசம், 03 நவம்பர் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் முரசு தீவிர புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Rain


ஆந்திர பிரதேசம், 03 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் முரசு தீவிர புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அர்னாப் புயல் ஆந்திர மாநிலத்தைக் கடந்தபோது பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

குறிப்பாக, பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

மேலும், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அர்னாப் புயலின் தாக்கத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, புயலால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை ஆந்திர மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் முரசு தீவிர புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முரசு புயலின் தாக்கம் குறித்து என்டிஆர் மாவட்ட ஆட்சியர் ஜி. லட்சுமிஷா கூறியதாவது,

இதுவரை மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 1.52 முதல் 2 மில்லிமீட்டர் வரை மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு மணி நேரத்தில் மட்டும் சுமார் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. புடமேரு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளைச் சீரமைக்கவும், நிலைமையைக் கண்காணிக்கவும் தேவையான குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பெரிய அளவிலான சாலைத் தடைகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ இல்லை. மாவட்டம் முழுவதும் இயல்பான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்கு நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவர்கள் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

தேவையற்ற பயணங்களையும், வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினால், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதுவரை எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V