Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியையும் பஞ்சாப் அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, நடப்பு ஆண்டில் டெல்லியில் 220 நாட்கள் தூய்மையான காற்று நிலவியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் காற்றின் தரம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், 2026-ம் ஆண்டின் காற்றுத் தரக் குறியீடு (AQI), கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் 1,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். மேலும், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு பஞ்சாப் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் துணைபோவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,
விவசாயிகளை ஒருபுறம் பயிர்க்கழிவுகளை எரிக்கத் தூண்டிவிட்டு, மறுபுறம் அவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சாடினார்.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசின் செயல்பாடுகள் முரண்பாடாக இருப்பதாகவும் விமர்சித்தார்.தொடர்ந்து, டெல்லியில் இருந்து பஞ்சாபுக்கு மாற்றப்பட்ட ரீனா குப்தாவுக்கு, அங்குள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தரவுகளைத் திருத்தி உண்மைகளை மறைப்பதற்காகவே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், ரீனா குப்தா, அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் என்றும் அவர் கூறினார். பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V