குஜராத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது கார் மோதி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
குஜராத், 03 நவம்பர் (ஹி.ச.) குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நிக்கோல் பகுதியில் உள்ள தேவாஷ்யா பள்ளி அருகே நடைபாதையில் குடும்பத்தினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த வி
Accident


குஜராத், 03 நவம்பர் (ஹி.ச.)

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நிக்கோல் பகுதியில் உள்ள தேவாஷ்யா பள்ளி அருகே நடைபாதையில் குடும்பத்தினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்தபோது ஓட்டுநர் மது உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்,

அகமதாபாத்தின் நானா சிலோடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான விரால் சவ்ஜிபாய் சௌத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது அவர் தனது சொந்த காரை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கிய காரை சோதனையிட்டபோது அதில் 6 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் விரால் சவ்ஜிபாய் சௌத்ரி மீது நிக்கோல் காவல் நிலையத்தில் தனியாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பூனம்பென் ஜிதேந்திரபாய் நாக்வாடியா (30) மற்றும் ஜிதேந்திரபாயின் மகன் சாகர் ஜிதேந்திரபாய் நாக்வாடியா (15) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார்த்திக் அசோக்குபாய் வசோயா (34), அவரது மனைவி ஸ்னேகல்பென் கார்த்திக்பாய் வசோயா (34) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து அகமதாபாத் போக்குவரத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V