Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திர , 04 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் ஒங்கோல் மாநகராட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட நள்ளமல்லி ஸ்ரீஷில்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குப்பம் பிரசாத்தை 37 ஆயிரத்து 172 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. மொத்த வார்டுகளில் தெலுங்கு தேசம் கட்சி 39 இடங்களிலும், கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதேநேரத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 3 இடங்களில் சுயேச்சைகள் உள்ளிட்ட பிற வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் ஒங்கோல் மாநகராட்சி கவுன்சிலில் தெலுங்கு தேசம் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.
'முரசு' புயல் காரணமாக ஒங்கோல் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. புயல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து, பிற்பகலில் இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்த வெற்றியை தொடர்ந்து ஒங்கோல் நகரில் தெலுங்கு தேசம் கட்சியினர் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA