பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்களை நீக்க கவர்னர் பரிந்துரை உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை - கேரள முதல்-மந்திரி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், 04 நவம்பர் (ஹி.ச.) கேரள மாநில பணியாளர் தேர்வாணையத்தின் (பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரை செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கேரள முதல்-மந்திரி குற
A


திருவனந்தபுரம், 04 நவம்பர் (ஹி.ச.)

கேரள மாநில பணியாளர் தேர்வாணையத்தின் (பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரை செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கேரள முதல்-மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

அரசியல் சட்டத்தின்படி கவர்னர் அனைத்து நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். ஆனால், பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்த விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

அதேவேளையில், பி.எஸ்.சி.யில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் கட்சியினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இத்தகைய முறைகேடுகளை மறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA