Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 நவம்பர் (ஹி.ச.)
சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏர் ஜோர்டான் கூடைப்பந்து மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், பல்கலைக்கழகம் மற்றும் கிளப் ஆண்கள், பெண்கள் பிரிவுகள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதன் தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விகாஸ் மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், போட்2டூ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் எம். ஸ்ரீதரன் முதன்மை விருந்தினராகவும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து வீரர் ஜே. பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய தேசிய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசங்கர் சி. மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில், பல்கலைக்கழகம் மற்றும் கிளப் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி முதலிடத்தையும், இந்துஸ்தான் ஜேமர்ஸ் ஏ அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பள்ளி மாணவர்கள் பிரிவில் ஜான் டியூவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், மாணவிகள் பிரிவில் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் ஏ அணியும் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதுடன், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA