வெங்காயக் கொள்முதல் விவகாரம் -உதயநிதியை கடுமையாக விமர்சித்த த.வெ.க!
தமிழ்நாடு, 04 நவம்பர் (ஹி.ச.) வெங்காயக் கொள்முதல் விவகாரத்தில் 450 மெட்ரிக் டன் வெங்காயத்தை எவ்வித ஆய்வுமின்றி தமிழக அரசு கொள்முதல் செய்ததாகக் கூறிய விவகாரத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இ
தவெக


தமிழ்நாடு, 04 நவம்பர் (ஹி.ச.)

வெங்காயக் கொள்முதல் விவகாரத்தில் 450 மெட்ரிக் டன் வெங்காயத்தை எவ்வித ஆய்வுமின்றி தமிழக அரசு கொள்முதல் செய்ததாகக் கூறிய விவகாரத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், தவறான தகவல்களைப் பரப்பி உதயநிதி ஸ்டாலின் தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF), NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், ஆனால் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வெங்காயம் தரமற்றதாக இருப்பது தெரியவந்ததால், கடந்த அக்டோபர் 31ஆம் தேதியே கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதாகவும் தவெக தெரிவித்துள்ளது.

மேலும், கொருக்குப்பேட்டை முனையத்தில் இருப்பதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அது கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான வெங்காயம் அல்ல என்றும் அரசின் செய்தி வெளியீடும், NAFED நிறுவனத்தின் விளக்க ஆவணமும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவரங்களை அறியாமல், 400 மெட்ரிக் டன் என்பதற்குப் பதிலாக 450 மெட்ரிக் டன் எனக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் அவசரமாகப் பதிவிட்டுள்ளதாகவும் தவெக குற்றம்சாட்டியுள்ளது.

உண்மை விவரங்களைத் தெரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல என விமர்சித்துள்ள தவெக, வெங்காயக் கொள்முதல் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் பதிவைக் கடுமையாகச்

சாடியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P