அக்னிவீரர்களுக்கு புதிய வாய்ப்பு - 2 ஆண்டுகள் கூடுதல் பணி வழங்கும் புதிய திட்டம்!
புதுடெல்லி, 04 நவம்பர் (ஹி.ச.) அக்னிபத் திட்டம் தற்போதுள்ள நடைமுறையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்
Delhi


புதுடெல்லி, 04 நவம்பர் (ஹி.ச.)

அக்னிபத் திட்டம் தற்போதுள்ள நடைமுறையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்த வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் பணிக்காலம் வழங்கும் புதிய நடைமுறை குறித்து இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் அக்னிவீரர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அவர்களின் செயல்திறன், ஒழுக்கம் மற்றும் பணித்திறன் ஆகியவை தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், திட்டம் அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது முதல் தொகுதி அக்னிவீரர்களின் நான்கு ஆண்டுகாலப் பணிக்காலம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் அக்னிவீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகப் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 சதவீத அக்னிவீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புதற்போதைய நடைமுறையின்படி, நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் அக்னிவீரர்களில் 25 சதவீதம் பேர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழக்கமான ஆயுதப் படைப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொதுச் சமூகத்திற்குத் திரும்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய மாற்றத்தின்படி, மீதமுள்ள 75 சதவீத அக்னிவீரர்களுக்கும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் அவர்கள் தங்களது பணித்திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

நிரந்தரப் பணியில் சேர வாய்ப்பு கிடைக்குமா?கூடுதல் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்திய ஆயுதப் படைகளில் தொடர்ந்து சேவை செய்ய விரும்பும் அக்னிவீரர்கள் நிரந்தரப் பணியில் சேருவதற்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.

இருப்பினும், அனைவருக்கும் தானாகவே நிரந்தரப் பணி வழங்கப்படாது. இதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறைகள் மற்றும் தகுதி அளவுகோல்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த மாற்றம் அக்னிவீரர்களின் எதிர்கால வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை குறித்த கவலைகளுக்கு இது புதிய வாய்ப்பை உருவாக்கக்கூடும். என அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V