பழனி முருகன் கோவில் பராமரிப்புப் பணிகள் நிறைவு-ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்!
பழனி, 04 நவம்பர் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக படிப்
Rope Car


பழனி, 04 நவம்பர் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் ஆகிய மூன்று வழிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் விரைவாகவும் எளிதாகவும் மலைக்கோவிலை அடைய முடிவதால், ரோப் கார் சேவையைப் பல பக்தர்கள் விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரோப் கார் சேவையில் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாதந்தோறும் ஒரு நாளும், ஆண்டுதோறும் 45 நாட்களும் பராமரிப்புப் பணிகளுக்காக சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் சுமார் 45 நாட்கள் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ரோப் கார் மீண்டும் இயக்கப்பட்டது.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து சேவை மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோப் கார் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரோப் கார் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் நீண்ட நேரம் காத்திருக்காமல் மலைக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பழுதுநீக்கும் பணிகள் முடிந்து ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது பழனிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V