மோடிக்கு சவால் விடுக்கும் ராகுல் காந்தி நாடாளுமன்ற விவாதத்திற்கு வரத் தயக்கமா?- பாஜக கேள்வி!
ஹைதராபாத், 04 நவம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் என். ராம்சந்தர் ராவ் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்கும் ராகுல் க
Ramchandra rav bjp


ஹைதராபாத், 04 நவம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் என். ராம்சந்தர் ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்கும் ராகுல் காந்தி, பிரதமருக்குச் சவால் விடுப்பது முரண்பாடான செயல் என அவர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் என். ராம்சந்தர் ராவ்,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி நாடாளுமன்றக் கூட்டங்களில் முறையாகப் பங்கேற்பதில்லை என்றும், அவையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் (SIR) மற்றும் ராகுல் காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேரடியாக விவாதிக்க வருமாறு சவால் விடுத்ததாக ராம்சந்தர் ராவ் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த விவாதத்தில் பங்கேற்க ராகுல் காந்தி முன்வரவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இல்லாத ராகுல் காந்தி, தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்குச் சவால் விடுப்பது முரண்பாடாக இருப்பதாகக் கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, தெருக்களில் நின்று விவாதிக்க விரும்பும் எதிர்க்கட்சித் தலைவரை இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை பார்த்ததில்லை என்றும் விமர்சித்தார்.

இறுதியாக, அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏன் தயங்குகிறார் என்றும், அவையை எதிர்கொள்ள அச்சப்படுகிறாரா என்றும் ராம்சந்தர் ராவ் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V