தீபாவளி அமாவாசை தரிசனம் -சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!
ஸ்ரீவில்லிபுத்தூர், 04 நவம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட விசேஷ
Sathuragiri


ஸ்ரீவில்லிபுத்தூர், 04 நவம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக, தீபாவளி தினமான நவம்பர் 8ஆம் தேதி அமாவாசை வருவதால் அன்றும் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை சில முக்கிய நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள நான்கு நாட்களில் திடீரென கனமழை பெய்தாலோ அல்லது மலையேற்றப் பாதையில் குறுக்கிடும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ பக்தர்கள் மலைக்குச் செல்லும் அனுமதி ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சதுரகிரி கோவிலுக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் வானிலை நிலவரம் மற்றும் வனத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மலை ஏற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V