தீபாவளியை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு நாளையும் விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு நாளையும் விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வரும் திங்கட்கிழமை அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மு
Madras high court


சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு நாளையும் விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வரும் திங்கட்கிழமை அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால், தொடர்ந்து கிடைக்கும் விடுமுறைக்குப் பிறகு வரும் நவம்பர் 10ஆம் தேதிதான் நீதிமன்றங்கள் மீண்டும் வழக்கமான பணிகளைத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வழங்கப்படும் கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 28ஆம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 12ஆம் தேதி செயல்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வசதியாக, நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V