Enter your Email Address to subscribe to our newsletters

சிலிகுரி, 05 நவம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சி அதிகாரத்தின் மீதான பேராசையால் வழிதவறிச் செல்வதாகவும், மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடு முழுவதும் உள்ள மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு திடீரென என்ன நடந்தது என்று விவாதித்து வருகின்றனர்.
சுமார் 60 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், அதன் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்துள்ளன.
இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தும் இன்று அந்தக் கட்சிகளின் நிலை என்னவாக இருக்கிறது?
மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி, தேவையற்ற குழப்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? அதிகாரத்தின் மீதான பேராசையே அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.
நீண்ட காலம் ஆட்சியில் இருந்தபோதிலும் வறுமையை ஒழிக்கவோ, நாட்டில் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ காங்கிரஸ் தவறிவிட்டது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சதித்திட்டங்களில் அக்கட்சி ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது இந்த விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும்போது, அதற்குப் பதிலளிக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் தலைமையில் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த குடிமக்களாகிய நாம் அனைவரும் இந்த மாற்றங்களைத் தெளிவாகக் காண முடிகிறது.
இத்தகைய வளர்ச்சிகரமான சூழலில், ராகுல் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்மறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் தற்போதைய சூழலைச் சீர்குலைக்கவும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களை நாட்டு மக்கள் ஆதரிக்கவில்லை என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V