Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரக்காசி, 05 நவம்பர் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி தர்மகுண்டிலிருந்து சுமார் 20 மீட்டர் முன்னதாக, டப்ரானி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா உத்தரவின்பேரில் மீட்புப் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், ஆற்றங்கரையில் இருந்து இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆற்றில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருப்பதால் மீட்புப் பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.இதையடுத்து நீர்நிலை காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.
காரில் மேலும் யாரேனும் பயணம் செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பான நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கவும் சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்படும் உயிர் பிழைத்தவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஆற்றில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V