ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் -நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
அல் அமரத், 06 நவம்பர் (ஹி.ச.) ஓமனில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-நேபாளம் அணிகள் இடையிலான 4-வது லீக் ஆட்டம் அல் அமரத்தில்
A


அல் அமரத், 06 நவம்பர் (ஹி.ச.)

ஓமனில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-நேபாளம் அணிகள் இடையிலான 4-வது லீக் ஆட்டம் அல் அமரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அந்த அணி 42.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேபாள அணியில் தர்ஷ் சோனர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆர்யவீர் சேவாக், லக்சியா ராஜேஷ் ராய்சந்தானி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்களும், லக்சியா ராஜேஷ் ராய்சந்தானி 63 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் இந்திய அணி 19.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA