நவம்பர் 29-ல் டெல்லியில் முக்கிய விழா- அசாம் முதல்வர் வெளியிட்ட தகவல்!
அசாம், 06 நவம்பர் (ஹி.ச.) பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான டாக்டர் பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிறைவு விழா வரும் நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அச
Assam cm


அசாம், 06 நவம்பர் (ஹி.ச.)

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான டாக்டர் பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிறைவு விழா வரும் நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

இந்திய இசை உலகில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர் அசாமைச் சேர்ந்த டாக்டர் பூபன் ஹசாரிகா பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், தனது படைப்புகள் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றவர்.

இவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் டாக்டர் பூபன் ஹசாரிகா தேசிய விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான விருதைப் பெற பிரபல பின்னணிப் பாடகி உஷா மங்கேஷ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதைப் பெற்றுக்கொள்ள அவரும் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். விழாவில் பிரதமர் மோடி நேரடியாக உஷா மங்கேஷ்கருக்கு விருதை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தேசிய மற்றும் மாநில அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்று இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளின் தூதர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பூபன் ஹசாரிகாவுடன் இணைந்து பணியாற்றிய கலைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, சுமார் 1,000 கலைஞர்கள் மற்றும் அழைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பூபன் ஹசாரிகாவின் புகழ்பெற்ற 'மனுஹே மனுஹோர் பாபே' பாடலைப் பாட உள்ளனர்.

மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்தப் பாடல் மூலம் அவரது இசைப் பங்களிப்பு மீண்டும் நினைவுகூரப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V