உத்தரப் பிரதேசத்தில் 4,543 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு – முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்!
லக்னோ, 06 நவம்பர் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 4,543 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
Yogi aadiyanath


லக்னோ, 06 நவம்பர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 4,543 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, பல்வேறு காவல் பிரிவுகளுக்காக 3,394 ஆண் உதவி ஆய்வாளர்களும், 848 பெண் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு (SSF) 60 உதவி ஆய்வாளர்களும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரப் பிரதேச சிறப்புப் பாதுகாப்புப் படையின் (UPSSF) மூன்று படைப்பிரிவுகளுக்கு 106 பெண் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத், 2017-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால், இத்தகைய தேர்வு நடைமுறை என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும் என்றும் கூறினார்.

கடந்த 2012 முதல் 2017 வரையிலும், அதற்கு முந்தைய 2003 முதல் 2017 வரையிலான காலகட்டத்திலும், பல்வேறு பணிநியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, வேலைக்கு விண்ணப்பித்த உண்மையான நபர்களுக்குப் பதிலாக வேறு நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதுபோன்ற பல வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒருவேளை அந்தப் பணிநியமனங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரையும் பணியிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கவலையும் தனக்கு இருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V