2026-ம் ஆண்டுக்கான காசி தமிழ் சங்கமம் 5.0 – திருக்குறளை உலகறியச் செய்யும் புதிய முயற்சி!
தமிழ்நாடு, 07 நவம்பர் (ஹி.ச.) தற்போது காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (KTS 5.0) வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1,400 பேர் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காசி, பிரயாக்ர
_


தமிழ்நாடு, 07 நவம்பர் (ஹி.ச.)

தற்போது காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (KTS 5.0) வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1,400 பேர் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையினர், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகத் துறையினர் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் 1,000 உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக மாணவர்களிடம் திருக்குறளின் சிறப்புகளை எடுத்துச் செல்லும் தேசிய அளவிலான மாணவர் ஈடுபாட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று திருக்குறளின் கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: Kashi Tamil Sangamam Registration.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து நவம்பர் 3-ஆம் தேதி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ரயில் போக்குவரத்து, தங்குமிட வசதிகள், கண்காட்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Hindusthan Samachar / Durai.J