தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை, 07 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்
A


சென்னை, 07 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA