Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 07 நவம்பர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கீர்த்தனா ஒவ்வொருவருக்கும் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பிரியாணி அடங்கிய பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுக்குக் கைகுலுக்கி தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களிடம் அன்பாகப் பழகி, அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சிவகாசி நகரைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், இத்தனை தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால்தான் சிவகாசி நகரம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
நீங்கள் அனைவரும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், சிவகாசி நகரம் தூய்மையாக இருக்காது. உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.
தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தூய்மை தேவதைகள். ராஜ்மோகன் அண்ணன் கூறுவதைப் போல, தூய்மை தேவதைகளுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இதுபோன்று தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உங்களுடன் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, பங்கேற்றவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / LOGESHWARI V