Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 08 நவம்பர் (ஹி.ச.)
அதானி குழுமம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை மூலதனச் செலவினங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மின்சாரம், உள்கட்டமைப்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
விமான நிலையங்கள், டேட்டா சென்டர்களில் அதானி குழுமம் பிரம்மாண்ட முதலீடு: ஆண்டுக்கு ரூ.40,000 கோடி செலவிடத் திட்டம்!
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதில் விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் குஜராத்தின் முந்த்ராவில் அமைக்கப்பட்டு வரும் பிவிசி (PVC) உற்பத்தி வளாகம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் 62 சதவீதம் அதிகரித்து ரூ.71,569 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ஈபிஐடிடிஏ (EBITDA) 56 சதவீதம் அதிகரித்து ரூ.11,958 கோடியாகப் பதிவாகியுள்ளது.
மேலும், அதானி குழுமத்தின் டேட்டா சென்டர் பிரிவு 1.2 ஜிகாவாட் அளவுக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. முந்த்ராவில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட பிவிசி ஆலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த முதலீடுகள் மூலம் விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P