“அவரும் நானும்” நூலை விமர்சித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கிண்டல்!
சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள நூலகங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பான நூல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “உலகப்
S.R.Sekar


சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள நூலகங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பான நூல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ என்ற நூல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் படிப்பதற்காக 4,611 நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

டால்ஸ்டாய், சாக்ரடீஸ், லெனின் ஆகியோருக்குப் பிறகு தோன்றிய மாபெரும் தலைவரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் புகழ்பெற்ற வாழ்க்கையைப் பற்றிய இந்த நூல், தற்போது பெரியார் அறிவுலகம், கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட நூலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் ஆசிரியர் உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ்ய புத்திரன் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த நூலகங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு உலகப் புகழ்பெற்ற நூல் ‘Why Do We Need MKS as Our PM’. தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியைப் பார்த்தீர்களா?” என விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P