பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிக்க 30,000 பைகள் - சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு!
சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.) தீபாவளியின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 பிரத்யேகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுகளால
Chennai Corporation


சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)

தீபாவளியின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 பிரத்யேகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுகளால் உருவாகும் கழிவுகளை இதர வீட்டுக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பட்டாசுக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் 600 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள் மாநகராட்சி மூலம் உரிய முறையில் எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பாக அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P