துர்க்கை அம்மன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து கேதார கௌரி விரத நோன்பு எடுப்பு
திருவண்ணாமலை, 08 நவம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலின் சின்னகடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோவிலில் தீபாவளி அமாவாசையை ம
Tiruvannamalai Temple


திருவண்ணாமலை, 08 நவம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலின் சின்னகடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோவிலில் தீபாவளி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து கேதார கௌரி விரத நோன்பு எடுத்தனர்.

தீபாவளி அமாவாசை முன்னிட்டு கேதார கௌரி விரத நோன்பு எடுப்பதற்கு திருவண்ணாமலை மாநகரில் உள்ள சின்னகடை வீதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் செய்த வடை பலகாரங்களுடன், வாழை பழம், சாமந்தி பூ, நோன்பு கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்கள் அடங்கிய நோன்பு சட்டியுடன் அருள்மிகு துர்க்கை அம்மன் கோவிலில் குருக்கள் கலச பூஜை செய்து அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நோன்பு சட்டியை கொடுத்து பெண்கள் மூன்று முறை சுற்றி அலறி இலை பூ உள்ளிட்டவற்றை கலசத்தில் மீது தூவி தீபாரதனை நடைபெற்று பின்னர் நோன்பு சட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

கேதார கௌரி விரத நோன்பு எடுப்பதற்காக ஏராளமானோர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து நோன்பு எடுத்துச் சென்றனர்.

முன்னதாக கேதார கௌரி விரத நோன்பு எடுப்பதற்காக இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை மாநகரில் உள்ள தேரடி வீதியில் நோன்பு கயிறு, தேங்காய், வாழைபழம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக குவிந்தனர்.

அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு பால் பழம் தேன் தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தீபாவளி அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கேதார கௌரி விரத நோன்பு எடுத்து சென்று வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN