தலைவனாக உழைப்பேன் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி பதிவு!
சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.) தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த
Kamal hasan


சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)

தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த மம்மூட்டி, சிரஞ்சீவி, மோகன்லால், பிரபாஸ், ராகவா லாரன்ஸ், சித்தார்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

உங்கள் அனைவரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகளும் அன்பான நல விசாரிப்புகளும் என்னை மிகவும் நெகிழச் செய்கின்றன. இந்த வாழ்வில் இதைவிட வேறென்ன வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அனைவருக்கும் எனது மனதின் அடியாழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன்; ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன்; ஒரு மனிதனாக நேர்வழியில் நடப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

இறுதியாக, தன்னுடைய உயிராகவும் உறவாகவும் தமிழாகவும் திகழும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V