நக்சலிசத்தின் பிடியிலிருந்து மீண்ட பஸ்தார் – பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!
சத்தீஸ்கர் , 08 நவம்பர் (ஹி.ச.) சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். கடந்த காலங்களில் நக்சலிசப் பிரச்சினை
Modi


சத்தீஸ்கர் , 08 நவம்பர் (ஹி.ச.)

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.

கடந்த காலங்களில் நக்சலிசப் பிரச்சினையை முந்தைய அரசுகள் தீவிரமாகக் கையாளவில்லை என விமர்சித்த அவர், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் அரசியல் உறுதியால் நிலைமை மாறத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது இன்று இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பி வருகின்றனர். குடும்பத்தினரும் உறவினர்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான தருணம் இது.

நானும் உங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இங்கு வந்துள்ளேன். நாட்டின் எல்லைகளிலும், உள்நாட்டிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களான நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர் போன்றவர்கள்.

இந்த முறை பஸ்தார் வனப்பகுதியில் உங்களுடன் தீபாவளியைக் கொண்டாட வந்துள்ளேன்.

ஒரு காலத்தில் நக்சலிசத்தின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக பஸ்தார் இருந்தது. ஆனால், உங்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து, தற்போது வளர்ச்சிக்கான புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தீபாவளி உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் தீபாவளியாக அமைந்துள்ளது.

பல தசாப்தங்களாக நாட்டை அச்சுறுத்தி வந்த நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு வெற்றி பெற்றுள்ள நிலையில் கொண்டாடப்படும் முதல் தீபாவளி இது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிசத்தின் பிடியிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் கொண்டாடப்படும் முதல் தீபாவளி இதுவாகும். நக்சலிசம் குறித்த அச்சத்திலிருந்து கோடிக்கணக்கான மக்கள் விடுபட்டுள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். இதில் உங்களைப் போன்ற துணிச்சலான வீரர்கள், பாதுகாப்புப் படையினர் ஆற்றிய பங்கு மகத்தானது. அதனால்தான் உங்களுடன் தீபாவளியைக் கொண்டாட இங்கு வந்துள்ளேன்.

ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், நாட்டின் எதிரிகளை வலுவான மன உறுதியுடனும் திட்டமிட்ட செயல்பாடுகளுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இதற்குத் தேவையான அரசியல் உறுதி 2014ஆம் ஆண்டில் வலுப்பெற்றது.

தாய்நாட்டிற்குச் சேவையாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்கள். அதன் பிறகு நாட்டின் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

நீண்ட காலமாக நக்சலைட்டுகளை விட அதிக எண்ணிக்கையில் நமது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பதைப் பார்த்து வந்தோம். ஆனால், கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர் கூட உயிரிழக்காத நிலை உருவாகியுள்ளது.

47 ஆண்டுகளில் முதல்முறையாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நாட்டின் சரியான கொள்கைகள் மற்றும் உறுதியான முடிவுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். இது உங்களின் வீரம், துணிச்சல் மற்றும் பொறுமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடிய நிகழ்வு, நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர்கூட உயிரிழக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 47 ஆண்டுகளில் முதல்முறையாக நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், நாட்டின் சரியான கொள்கைகள் மற்றும் உறுதியான முடிவுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இது பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல் மற்றும் பொறுமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

2026ஆம் ஆண்டு தீபாவளி உண்மையிலேயே சிறப்பானது. பல தசாப்தங்களாக நீடித்த நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு வெற்றி பெற்றுள்ள நிலையில் கொண்டாடப்படும் முதல் தீபாவளி இது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் நக்சலிச அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் இந்தத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தச் சாதனையில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு மிகப்பெரியது. அதனால்தான் அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாட இங்கு வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V