முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா
மதுரை, 08 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மக்கள் நலப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரது ஆட்சியில் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் பயன்பெற வேண்டும் என்றும் முஸ்தபா வேண்டிக்க
Tvk


மதுரை, 08 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மக்கள் நலப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரது ஆட்சியில் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் பயன்பெற வேண்டும் என்றும் முஸ்தபா வேண்டிக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக புனித மெக்காவில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அதில், முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக மெக்காவிற்கு வந்து மொட்டை அடித்து பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாகவும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகளும் நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கான சேவையை ஆற்ற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவரின் நலனுக்காக வெளிநாட்டில் உள்ள புனிதத் தலத்திற்குச் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பிரார்த்தனை செய்துள்ளது தவெகவினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V