எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து - நயினார் நாகேந்திரன்
சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.) பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில
Lk athvani


சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)

பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

எல்.கே. அத்வானிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும், நாட்டின் அரசியல் முன்னேற்றத்திற்கும் முக்கியப் பங்காற்றிய மூத்த தலைவர்களில் ஒருவர் அத்வானி என நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அத்வானி, கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பை பலமுறை வகித்துள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சராகவும், நாட்டின் துணைப் பிரதமராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செயல்பட்டுள்ளார்.

தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் தேசப்பற்று, கொள்கை உறுதி மற்றும் பொதுப்பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை முன்னிறுத்திச் செயல்பட்டவர் அத்வானி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அனுபவத்தாலும், பொதுவாழ்வில் ஆற்றிய சேவைகளாலும் பல தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத் திகழும் அவரது பங்களிப்பு என்றும் போற்றுதலுக்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிறந்தநாள் காணும் எல்.கே. அத்வானி நீண்ட ஆயுளுடனும், சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V