Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 08 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் கெடிலத்தில் காய்கறிக் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அவர் விரும்பியுள்ளார்.
இதற்காக இருளர்கள், கழைக்கூத்தாடிகள், நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்க முடிவு செய்தார்.
அதன்படி, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த சிலம்பரசன், அவர்களுக்கு தக்காளி, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளையும், இனிப்புப் பெட்டிகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தனது காய்கறி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இதுபோன்ற உதவிகளுக்காக ஒதுக்கி வைத்துள்ளதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
அனைவரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிலம்பரசன் நேரில் வந்து வழங்கிய காய்கறிகள் மற்றும் இனிப்புகளைப் பெற்றுக்கொண்ட 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், அவரது உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன், தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தைத் தனது சொந்த லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல், அதில் ஒரு பகுதியை ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் மகிழ்ச்சிக்காகச் செலவிட்ட சிலம்பரசனின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V